Skip to content

திருமணத்தைவிட- தனியாக மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறேன்.. நடிகை திவ்யா தாத்தா

சிக்கலான திருமண வாழ்க்கையைவிட மகிழ்ச்சியாக தனியாக இருப்பதையே விரும்புகிறேன் என பிரபல நடிகை தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை நடிகை திவ்யா தத்தா. 48 வயதான இவர், பல படங்களில் சிறந்த மனைவி மற்றும் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருப்பினும், நிஜ வாழ்க்கையில் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசிக்கிறார். திருமணம் செய்து கொள்ளாதது பற்றி அவர் அளித்துள்ள பேட்டி: தான் காதலுக்கு தயாராக இருக்கிறேன். ஆனால் திருமணம் செய்துகொள்ள ஆசை இல்லை.

சரியான காரணங்களுக்காக திருமணம் செய்துகொள்ள வேண்டும். மிகவும் தீவிரமாக சொல்வதானால், திருமணம் என்பது 2 பேர் ஒன்றாக வளர வேண்டிய ஒரு அமைப்பு. அது எனக்கு சரியாக தோன்றவில்லை என்றால், நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். ஒரு கொந்தளிப்பான அல்லது சிக்கலான திருமண வாழ்க்கையை விட, நான் மகிழ்ச்சியாக தனியாக இருப்பதையே விரும்புகிறேன். அதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு தேவையானது திருமணம் அல்ல, துணைதான் என்ற ஒரு கட்டத்தில் நான் இருப்பதாக உணர்கிறேன்.
அது என் விருப்பம், அப்படித்தான் இருக்கிறது. வாழ்க்கையில், ஒருபோதும் முடியாது என சொல்ல கூடாது என்று நான் எப்போதும் நினைத்திருக்கிறேன். அதனால் நான் எதற்கும் மறுப்பு சொல்வதில்லை. தற்போதைக்கு, இதுதான் என் நிலை. இதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒவ்வொரு உறவிலும் அடிப்படை மரியாதை அவசியம் என்று நினைக்கிறேன். இதைத்தான் அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன். இதை செய்யாதே, அதை செய்யாதே என்றோ, திருமணத்திற்கு தேவையானதை செய்ய கூடாது என்றோ திருமண உறவு கூறவில்லை. ஆனால் அதை செய்வதற்கு ஒரு வழி இருக்கிறது. சம்மதம் மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!