Skip to content

எம்ஜிஆர் படங்களை பயன்படுத்தினால்….அதிமுக ஓட்டு விஜய்க்கு போகாது… ஜெயக்குமார்

  • by Authour

அண்ணா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்களை பயன்படுத்துவதால் அதிமுக’வின் ஓட்டுக்கள் விஜய்க்கு போகாது. விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

ஆண்டுதோறும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அரசியல் கட்சிகள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் அதிமுக கட்சி சார்பில் அண்ணாவிற்கும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அதிமுக சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை அண்ணா சாலையில், அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சிகள் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது….

தாழ்ந்து கிடந்த தமிழகத்தை தூக்கிப் பிடித்தவர் பேரறிஞர் அண்ணா.

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார்..

செங்கோட்டையன், மன்னிப்போம் மறப்போம் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி’தான் முடிவு எடுக்க வேண்டும்.

தவெக விஜய்’யின் திருச்சி பிரச்சாராம் குறித்து பேசிய ஜெயகுமார்…

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு மட்டுமல்ல உலக அளவில் தவிர்க்க முடியாத சக்திகள். எனவே அப்படிப்பட்ட மாபெரும் தலைவர்களின் புகைப்படங்களை விஜய் உபயோகிப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இதன் மூலம் விஜய்’க்கு ஓட்டுக்கள் வருமா வராதா என்ற கேள்வி உள்ளது. அண்ணா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்களை பயன்படுத்துவதால் மட்டுமே ஓட்டுக்கள் விஜய்க்கு வராது. அதுமட்டும் உறுதி. எம்ஜிஆர் மற்றும் அண்ணாவின் புகைப்படங்களை விஜய் பயன்படுத்துவதன் மூலம் அதிமுகவின் ஓட்டுக்கள் விஜய்க்கு ஒரு காலத்திலும் போகாது. இதனால் விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். எங்கள் தலைவரின் ஸ்டைலை விஜய் ஃபாலோ செய்வதால் எங்களின் கட்சி ஓட்டுகள் எங்கேயும் போகாது…

விஜயின் மதுரை மாநாட்டில் விஜய், மு.க ஸ்டாலினை “Stalin uncle” என்று அழைத்தார். பின்னர் நடந்த கூட்டத்தில் “stalin sir” என்று அழைத்தார். விஜய் என்னிடம் கேட்டிருந்தால் நானே நல்ல லீட் கொடுத்திருப்பேன். “Cm Stalin sir” என்பதை விட “சி.எம் சாத்தான் சார்” என்றே அழைத்திருக்க வேண்டும். அவரது மகன் உதயநிதியை “மைடியர் குட்டிச்சாத்தான்” என்று அழைத்திருக்க வேண்டும்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கரூரில் நடைபெறக்கூடிய திமுக’வின் முப்பெரும் விழாவிற்க்கே முக்கியத்துவம் கொடுக்கிறார். மாறாக தமிழ்நாட்டில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் பெரும் மழை உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. துறை அமைச்சராக உள்ள கே.என் நேரு மழைகால முன்னேற்ப்பாட்டு நடவடிக்கைகளுக்கு கவனம் செலுத்தாமல் முப்பெரும் விழாவிற்கு மட்டுமே கவனம் செலுத்துகிறார்.

தமிழ்நாட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் திமுக அரசு தோல்வியை தழுவியுள்ளது. சட்டம் ஒழுங்கு மோசம், கட்டமைப்பு வசதிகள் மோசம், லஞ்ச லாவண்யம் ஆகியவைதான் தமிழ்நாட்டில் ஸ்டாலினின் சாத்தான் ஆசியில் நடைபெறுகிறது.

error: Content is protected !!