அரியலூர் மாவட்டம் கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த அருள்செல்வன் என்பவருக்கு இடம் வழி சம்பந்தமாக அதே ஊரைச் சேர்ந்த ஒருவருடன் தகராறு மற்றும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட இடத்தகராறு சம்பந்தமாக தா.பழுர் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் விசாரித்ததாக கூறப்படுகிறது. போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நீதி கேட்டு அருள்செல்வன் மற்றும் அவரது மனைவி இரண்டு பசு மாடுகளுடன் சாலை மறியலில்
ஈடுபட்டனர்.மேலும் அருள்செல்வன் மற்றும் அவரது மனைவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டனர். மண்ணெண்ணையை ஊற்றும் போது தடுத்த போலீசார் மீதும் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தா.பழூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். நீதி வேண்டும் என கேட்டு சாலைக்கு வந்து நபர்களை குண்டுகட்டாக தூக்கி சென்றதாலும், மண்ணெண்ணையை போலீசார் மீது ஊற்றியதாலும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கும்பகோணம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.