Skip to content

டில்லியில் எம்.பி. சுதாவிடம் செயின் பறித்த நபர் கைது..!!

  • by Authour

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருப்பதால் தமிழக எம்.பிக்கள் பலரும் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கிறார். அந்தவகையில்  காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினராக  இருப்பவர் சுதா எம்.பி.  டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி நாடாளுமன்ற அலுவல் நாட்களில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலயில் நேற்று (ஆக 5) காலை வழக்கம் போல் அவர் டெல்லி சாணக்கியபுரி சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அவருடன் மற்றொரு தமிழக எம்.பி-யான ராஜாத்தியும் இன்று நடைபயிற்சி சென்றுள்ளார். போலாந்த் நாட்டின் தூதரகதிற்கு அருகே எம்.பி.க்கள் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் எம்.பி சுதாவின் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.

ஹெல்மெட் அணிந்து கொண்டு எதிர் திசையில் மெதுவாக வந்து பின்னர் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதில், எம்.பி கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டதுடன், அவர் அணிந்த உடையும் கிழிந்துள்ளது. இதுகுறித்து எம்.பி சுதா சாணக்கியா பூரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அத்துடன்  குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்றும், 4.5 சவரன் தங்க சங்கிலையை மீட்டுத்தர வேண்டும் என்றும்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கடிதம் எழுதினார்.  இந்நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீஸார் எம்.பியின் தங்கச் சங்கிலியையும் மீட்டுள்ளனர். “எம்.பி சுதாவின் செயின்பறிப்பு  வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்படவர் கைது செய்யப்பட்டு செயின் மீட்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் விரைவில் வழங்கப்படும்” என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது

error: Content is protected !!