கும்பகோணம் மகாமக குளம் அருகே சற்று முன்பு சத்தமாக ஹாரன் அடித்துச் வந்த தனியார் மினி பேருந்தை வழிமறித்து உதவி ஆய்வாளர் தேர்வு எழுதிய இருவர் பயிற்சி பெற்று வரும் உதவி ஆய்வாளர் எனக் கூறி பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரை நடுரோட்டில் தாக்கியதால் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கும்பகோணம் அருகே மகாமக குளம் பகுதியில் சற்று முன்பு சத்தமாக ஹாரன் அடித்துக் கொண்டு வந்த தனியார் மினி பேருந்து ஒன்று வந்துள்ளது அதன் எதிரே சென்ற காவல் உதவி ஆய்வளர் தேர்ச்சி பெற்ற இருவர் அதிக ஹாரன் ஒலி எழுப்பிக் கொண்டு வந்த தனியார் மினி பேருந்தை மரித்து ஹாரன் பாரம் எல்லாம் அடிக்க கூடாது என்று ஓட்டுனரிடம் எச்சரித்துள்ளனர் அந்த மினி பேருந்து ஓட்டுனர் நான் அப்படி தன் அடிப்பேன் என்று கூறியதால் அவர்களிடையே வாக்குவாதம் முற்றியது ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காவல் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதிய இருவர் பயிற்சி பெற்று வரும் காவல் உதவி ஆய்வாளர்கள் கூறி மினி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கியுள்ளனர் இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்
இனிமேலும் இது பன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கும்பகோணம் பகுதியில் தனியார் பேருந்துகள் அதிக ஹாரன் ஒலி எழுப்பி தான் வருகின்றனர் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர் இதனை உடனே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அதிக ஒலி எழுப்பும் வாகனங்களின் ஹோரோன்களை பறிமுதல் செய்ய வேண்டும் என கும்பகோணம் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

