நாட்டின் 79- வது சுதந்திர தின விழா திருச்சி சுப்பிரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் சரவணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு, காவலர்களின் அணிவகுப்பினை கலெக்டர் சரவணன் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக வண்ண பலூன்களை சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை புறாக்களையும் கலெக்டர் வானில் பறக்கவிட்டார். மேலும் பல்வேறு துறைகளின் அலுவலர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 25 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஊரக வளர்ச்சி துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட தொழில் மையம் . தாட்கோ, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தொழிலாளர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 18 லட்சத்து 15 ஆயிரத்து 222 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கு சென்று உயர் அலுவலர்களால் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம்,மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டனர். மேலும் அரசு துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு கலெக்டர் பரிசுகள் வழங்கி கவுரவித்தார். முன்னதாக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பாக நடனம் ஆடிய குழுவிற்கு பரிசுகள் வழங்கபட்டது