திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழாவில் மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், துணை மேயர் ஜி. திவ்யா ஆகியோர் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
அதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாசற்ற முறையில் சிறப்பாக 25 ஆண்டுகள் பணி செய்த 27 மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.2000 வீதம் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி, பின்னர் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிபெண்கள் பெற்ற மாநகராட்சி அலுவலர்கள் , பணியாளர்களின் குழந்தைகள் 6 மாணவ, மாணவிகளுக்கும் முறையே ரொக்க பணம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மேயர்அன்பழகன் வழங்கி பாராட்டினார்கள்.
மேலும், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய நகர் நல அலுவலர், உதவி ஆணையர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், சுகாதாரஅலுவலர்கள், செவிலியர்கள் , பணியாளர்கள் மற்றும்சிறப்பாக பணியாற்றிய 57 நபர்களை கௌவுரவித்து பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசு வழங்கினார். மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் துணை ஆணையர் கே.பாலு, நகரப் பொறியாளர் .சிவபாதம், மண்டலத்தலைவர்கள் ஆண்டாள்ராம்குமார், மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமிகண்ணன், ஜெயநிர்மலா, நகர் நல அலுவலர் விஜயசந்திரன் செயற்பொறியாளர்கள் பாலசுப்ரமணியன், செல்வராஜ், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற் பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.