மயிலாடுதுறையில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இந்திய விளையாட்டு ஆணையம் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாவட்ட எஸ்பி முன்னிலையில் நடைபெற்ற காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்:-மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது. தொடர்ந்து சமாதான புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் பறக்கவிட்டனர். பின்னர் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் 357 பேருக்கு நற்சான்றிதழ்களும் 401 பயனாளிகளுக்கு சுமார் 10 கோடியே 53 லட்சத்து 82 ஆயிரத்து 775 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வழங்கினார்.
மயிலாடுதுறையில்… சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்..
- by Authour
