Skip to content

புதுகையில் சுதந்திர தினவிழா: கோலாகல கொண்டாட்டம்

  • by Authour

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் இன்று 79-வது சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா,   தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர்  காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுதாரர்களை பொன்னாடை அணிவித்து  கவுரவித்தார். அதைத்தொடர்ந்து சமாதான வெள்ளை புறாக்களையும், தேசியக்கொடி வண்ணத்திலான பலூன்களையும் பறக்கவிட்டார்.
இவ்விழாவின்போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, வேளாண்மை – உழவர் நலத்துறை, தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.22,93,338 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா வழங்கினார்.
மேலும் வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கருவூலத்துறை  வேளாண்மை – உழவர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக பணிபுரிந்த 321 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார்.
ஓய்வூதியர் களுக்கான பணிகளில் சிறப்பாக
செயலாற்றியமைக்காக  புதுக்கோட்டை மாவட்ட கருவூல அலுவலக கணக்கர் கி. வெங்கடேஷன் பணியை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் மு. அருணா நற் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.அதைத்தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர்  பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா,  மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .பா.ஜெயசுதா, மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து  கொண்டனர்.

error: Content is protected !!