பஞ்சாப் மாநிலத்தின் முக்கி நகரமாக அமிர்தசரஸ் நகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் நேற்று இரவு முதல் பஞ்சாபில் மின்தடை செய்யப்பட்டு உள்ளது. அங்கு போர் நடந்து வருவதற்கான அத்தனை பதற்றங்களும் நிலவுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அதே நேரத்தில் பாகிஸ்தானின் ஏவுகணைகள், ட்ரோன்கள் அத்தனையும் இந்திய படைகளால் தடுத்து அழிக்கப்பட்டு வருகிறது.
இன்று அதிகாலையில் சம்பா எல்லை வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 7 பேர் இந்திய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன.
