Skip to content

இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆட்டோ பேரணி…

திருச்சி, திருவெறும்பூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவெறும்பூரில் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து அரியமங்கலம் பழைய பால்பண்ணை வரை ஆட்டோ பேரணி நடைபெற்றது.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் டெல்லியில் வருகின்ற ஏப்ரல் ஐந்தாம் தேதி உழைப்பாளி மக்களின் பேரணி நடைபெற உள்ளது.

இதனை அடுத்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் திருவெறும்பூர் கடைவீதியில் இருந்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழியாக அரியமங்கலம் பழைய பால்பண்ணை வரை ஆட்டோவில் பிரச்சார பேரணி நடைபெற்றது.
பேரணியில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் ரூபாய் 26 ஆயிரம், ஓய்வூதியம் ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டியும், ஒப்பந்த முறை ஒழிக்கப்பட்டு ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தர படுத்துவதுடன் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளையும், மின்சார சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாகிய தினக்கூலி ரூபாய் 600 ஆக உயர்த்தி வழங்கவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையமாக்குவதை நிறுத்தவும், விலைவாசி வியர்வை கட்டுப்படுத்தவும், உணவு பொருள் மீது உள்ள ஜி எஸ் டி வரியை ரத்து செய்யவும், பெரும் பணக்காரர்கள் கார்ப்பரேட்டுகள் மீது கூடுதல் வரி விதித்திட வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைத்திடவும். விளிம்பு நிலை மக்கள் மீதான தாக்குதலையும், ஒடுக்கு முறைகளையும் தடுத்து நிறுத்திட வேண்டும்.

வன உரிமைச் சட்டம் 2006 அமல் படுத்தவும் | கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வனப்பகுதி வாழ் மக்களை வெளியேற்றுவதை நிறுத்த வேண்டும். அனைவருக்குமான கல்வி சுகாதாரத்தை உறுதிப்படுத்தவும், புதிய கல்விக் கொள்கையை கைவிடவும், வருமான வரி வரம்பிற்குள் வராத மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வீடற்ற அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசமிட்டவாரு பேரணியில் ஊர்வலமாக சென்றனர்.

இதில் தரைக் கடை வியாபாரிகள் சி ஐ டி யூ சங்க தொழிலாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பலர் பேரணியில் ஊர்வலமாக சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!