டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்து ஏமாற்றத்தை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி, ODI தொடரில் சிறப்பான திரும்பி அடியை கொடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் (நவம்பர் 30) இந்தியா 349/8 ரன்கள் என நல்ல ஒரு டார்கெட்டை வைத்தது. விராட் கோலி 135 ரன்கள் (120 பந்துகள்) உட்பட அபாரமாக விளையாடி, 52வது ODI சதத்தை அடைந்தார். ரோஹித் ஷர்மா 57 ரன்கள் (50 பந்துகள், 5 சிக்ஸ்) அடித்து ODIயில் அதிக சிக்ஸ் அடி சாதனையை உடைத்தார்.
கே.எல். ராகுல் 60 ரன்கள் அடித்து அணிக்கு முக்கிய ஆதரவு அளித்தார். தென்னாப்பிரிக்காவின் ஓ. பார்ட்மன் 2/60 என விக்கெட் எடுத்தாலும், இந்தியாவின் பேட்டிங் ஆதிக்கம் தொடர்ந்தது.தென்னாப்பிரிக்கா 350 ரன்கள் இலக்கை விரட்ட முயன்றது, ஆனால் 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
மே.பி. ப்ரீட்ஸ்கே 72 ரன்கள், மார்கோ ஜான்சன் 70 ரன்கள், கார்பின் போஷ் 67 ரன்கள் (51 பந்துகள்) அடித்து போராடினாலும், இந்திய பவுலர்கள் கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்படும் நிலையில் 2வது பந்தில் போஷை பிரசித் கிருஷ்ணா விக்கெட் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். குல்தீப் யாதவ் 4/68 என சிறப்பாக பந்துவீச்சு செய்தார். இந்தியாவின் தளர்வில்லா பந்துவீச்சும், வெற்றிக்கு முக்கிய காரணம்.
போட்டி முடிவில் ராஞ்சி ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கினர்.இந்த வெற்றியில் “அந்த 17 ரன்கள்” மிக முக்கியமானது என்று தான் சொல்லவேண்டும். தென்னாப்பிரிக்கா பவுலர்கள் 23 எக்ஸ்ட்ரா ரன்கள் (வைட்கள், நோபால்) கொடுத்ததால் அவர்கள் தோல்வியடைந்தனர். ஆனால் இந்திய பவுலர்கள் வெறும் 6 எக்ஸ்ட்ரா ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தனர்.
இந்த 17 ரன்கள் வித்தியாசம் (23-6) தோல்வி-வெற்றியைத் தீர்மானித்தது. இந்தியாவின் கட்டுப்பாட்டான பந்துவீச்சு தென்னாப்பிரிக்காவின் தவறுகளைப் பயன்படுத்தி, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இது ODI தொடரில் இந்தியாவின் திரும்பி அடி.3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் அடுத்த போட்டி டிசம்பர் 3 அன்று ராப்பூரில் நடைபெறும். அதிலும் இந்திய வெற்றி பெற்றது என்றால் தொடரை வென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

