கோவை கொடிசியாவில் தங்க நகை பூங்கா அமைக்க நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தா.மோ அன்பரசன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி, மேலும் கருத்துக்களை கேட்டு எறிந்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறும்போது :
கோவை மாவட்டத்தில் உள்ள விஸ்வகர்மா தொழில் செய்யக் கூடிய தொழிலாளர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் இங்கு புகழ்பெற்ற அதிக தங்க நகை தொழிலாளர் வசிக்கும் பகுதி என்றும், இந்த பகுதியில தங்க நகை பூங்கா ஒன்று அமைத்து தர வேண்டும் என முதல்வர் இடத்தில் கோரிக்கையை வைத்ததாகவும், அந்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் கடந்த இரண்டு மூன்று, மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வருகை தந்த போது அரசு விழாவிலே கோயம்புத்தூர் மாவட்டத்தில் தங்க நகை பூங்கா 126 கோடி மதிப்பிலே அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் இன்றைக்கு குறிச்சி சிட்கோ தொழில் பேட்டையில் ரூபாய் 126 கோடி மதிப்பீட்டில் 2.46 ஏக்கர் பரப்பில், 8 லட்சத்தி 86 ஆயிரம் சதுர அடியில், எல்லா வசதிகளும் கொண்ட ஒரு தொழில் பூங்காவை அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டு, இன்றைய தினம் கோவையில் இருக்கின்ற 18 – க்கும் மேற்பட்ட தங்க, நகை தொழில் முனைவர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்து முதல்வரின் ஆலோசனைப்படி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும்,
மேலும் எந்தெந்த வசதிகள் தேவை என்பதை அந்த சங்கங்களின் மூலமாக அறிந்து அதையும் நிறைவேற்றி தர வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி இன்று அந்த சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, என்னென்ன திட்டங்கள், வசதிகள் அங்கே வரவுள்ளது என்று எடுத்துக் கூறியதாகவும், அவர்களும் பல்வேறு கருத்துக்களை வழங்கியிருப்பதாகவும், முதல்வன் 1.2 கோரிக்கைகள் வைத்ததாகவும் அந்த கோரிக்கைகளை முதல்வரிடம் கொண்டு சென்று நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவிலே மிகச் சிறந்த பூங்காவாக அமையும் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் கோவை மாவட்டத்தில் மட்டும் தமிழக அரசு பொறுப்பேற்று பல்வேறு திட்டங்களை செய்துள்ளதாகவும், நமது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது சிறு ஒரு தொழில் நான் என்றும் அந்த தொழில்களை பாதுகாக்க மேலும் வளர்ச்சி அடைய நம்ம தமிழக முதலமைச்சர் பல்வேறு புதிய திட்டங்களையும் இன்றைக்கு அறிவித்து செயல்படுத்துகின்ற அரசாக விளங்கிக் கொண்டுள்ளதாகவும், நான்கு ஆண்டுகளில் மட்டும் ஐந்து வகையான சுய வேலைவாய்ப்பு திட்டம் இந்த கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு 69 கோடியே 55 லட்ச ரூபாய் மானியம் கொடுத்து 316 கோடியே 54 லட்ச ரூபாய் வங்கி கடன் வாங்கி கொடுத்தும், 1,568 தொழில் முனைவோர்கள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தவர் அதுமட்டுமல்லாமல் 10 வகையான மானியங்கள் சிறு, குறு துறையில் 202 தொழில்முனை அவர்களுக்கு 134 கோடியே 27 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு உள்ளதாகவும்,
கோவை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சின்னவேடப்பட்டியில் 5 கோடி 69 லட்சம் மதிப்பில் அலுமினியம் டை காஸ்டிங் குழுமம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அது கடந்த 10.6.2024 ஆம் தேதி இருந்து செயல்பட்டு வருவதாகவும், அப்பநாயக்கன்பட்டி புதூரில் 4 கோடி மதிப்பில் பிளாஸ்டிக் மறுசுழற்சி குழுமம் அமைக்கப்பட்டு இயங்கி வருவதாகவும், வெள்ளலூர் பகுதியில் 4 கோடியை 44 லட்சம் மதிப்பில் அச்சு வார்ப்பு குழுமம் அமைக்கப்பட்டு இயங்கி வருவதாகவும், பள்ளபாளையம், மோப்பேரிபாளையம் ஆகிய இரண்டு இடங்களில் தனியார் தொழிற்பேட்டை 44 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கு அமைக்கப்பட்டு வருவதாகவும், குறிச்சியை சிட்கோ தொழில் பேட்டையில் ரூபாய் 22 கோடியே 20 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 1.49 ஏக்கர் பரப்பிலே 6,000 தொழிலாளர்கள் தங்கும் வகையில் தங்கும் விடுதி கட்டப்பட்டு தமிழக முதல்வர் துவங்கி வைத்ததாகவும், அது இல்லாமல் 8 கோடியே 80 லட்சம் மதிப்பில் பொள்ளாச்சி கயிறு குழுமம் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், ஜூலை மாதம் திறந்து வைக்கப்படும் என்றும், செவலம்பாளையத்தில் 18 கோடிய 6 லட்சம் மதிப்பு தனியார் தொழில் பேட்டை பணிகள் நடைபெற்று வருவதாகவும், 2 மாதங்களில் பணிகள் நிறைவு பெற்று திறந்து வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். கிட்டம்பாளையத்தில் 24 கோடி 61 லட்சம் மதிப்பீடு அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழில் பேட்டை பணிகள் ஜூன் மாதம் நிறைவு பெறும் என்றும், குறிச்சி சிட்கோ தொழில் பேட்டையில் ரூபாய் 14 கோடியே 85 லட்சம் திட்ட மதிப்பீடு 7 கோடியே 94 லட்சம் மானியத்துடன் மின் வாகன மோட்டார் பரிசோதனை மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.