Skip to content

திருச்சி – சென்னை இடையே இண்டிகோ விமான சேவைகள் அதிகரிப்பு

திருச்சி மற்றும் சென்னை இடையே கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி முதல் தினமும் 2 சேவைகளாகக் குறைக்கப்பட்டிருந்த இண்டிகோ விமான சேவைகள், தற்போது 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி சென்னையிலிருந்து திருச்சிக்கு காலை 7.10, 10.10 மற்றும் மதியம் 2.35, மாலை 5.25 ஆகிய நேரங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மறுமார்க்கமாக திருச்சியிலிருந்து சென்னைக்கு காலை 7.35, 10.35 மற்றும் மதியம் 2.55, மாலை 5.55 ஆகிய நேரங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் விமான பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!