Skip to content

சர்வதேச மூத்தோர் தடகள போட்டி.. இந்தியாவிற்காக திருச்சி நபர் வெண்கலம்

சர்வதேச அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் ஹாங்காங்கில் உள்ள வான் சாய் விளையாட்டு மைதானத்தில் நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.‌ இதில் 80 மீட்டர் ஓட்டம் முதல் 5000 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்றன. இந்த சர்வதேச மூத்தோர் தடகள போட்டியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த தடகள வீரர்கள் கலந்துகொண்டு போட்டியிட்டனர். இதில் 40-44 வயது பிரிவு 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவிற்காக திருச்சி, தில்லை நகரை சேர்ந்த மனோகரன் கார்த்திக் கலந்துகொண்டு போட்டியிட்டு 3வது இடத்தை பிடித்து வெண்கலம் பதக்கத்தை வென்றார். இந்தியாவிற்காக வெண்கலம் பதக்கம் வென்ற மனோகரன் கார்த்திக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!