ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.
அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. ரிஷப் பந்த் தலைமயிலான லக்னோ அணியும் 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது.
கொல்கத்தா அணி தனது கடைசி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. அதேவேளையில் லக்னோ அணி தனது கடைசி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
அடுத்த போட்டி சண்டிகரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகிறது. சென்னை அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 1 வெற்றியை மட்டும் பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 3 போட்டிகளில் ஆடி 2 வெற்றிகளை பெற்றுள்ளது. சென்னை அணி இன்று மீண்டும் வெற்றிகணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பில் சிஎஸ்கே ரசிகர்கள் உள்ளனர்.
நேற்று இரவு மும்பையில் நடந்த போட்டியில் மும்பையும், பெங்களூரு ஆர்சிபியும் மோதியது. இதில் முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை 20 ஓவா் முடிவில் 9 விக்கெட் இழந்து, 209 ரன்களே எடுத்தது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி ஓவரை வீசிய குர்னால் பாண்டியா வீசினார். அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். குர்னால் பாண்டியாவின் அபார பந்து வீச்சு, பெங்களூரை வெற்றிக்கு அழைத்து சென்றது. நேற்றைய போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது.