இந்தியாவில் கடந்த மார்ச் 22ம் தேதி ஐபிஎல் போட்டிகள் நடந்து வந்தது. மொத்தம் 74 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நேற்று இரவு வரை 58 போட்டிகள் நடந்தது. நேற்று இரவு இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடந்த போட்டியில் பஞ்சாப், டில்லி அணிகள் மோதின. மழையால் ஒரு மணி நேரம் போட்டி தாமதமாக தொடங்கியது. பஞ்சாப் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது(10.1 ஓவர்) மைதானத்தில் மின்சாரம தடை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. பின்னர் வீரர்கள் அனைவரும் தர்மசாலாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று முதல் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. போர் சூழல் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ள பிசிசிஐ, போட்டி இனி எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
