Skip to content

அமெரிக்க படைத் தளங்கள்-இஸ்ரேல் மீது செஜ்ஜில் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்

தெஹ்ரான்: மேற்காசியாவில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது செஜ்ஜில் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. நடனமாடும் ஏவுகணை என வர்ணிக்கப்படும் செஜ்ஜில், எதிரியின் ஏவுகணை தடுப்பு கேடயங்களையும் தாண்டி தாக்க கூடியது. ஏவுகணை எதிர்ப்பு குண்டுகள் வந்தால் அதனை எதிர்கொண்டு பாதையை மாற்றிச் சென்று செஜ்ஜில் தாக்கக் கூடியது. செஜ்ஜில் ஏவுகணை தனது பாதையை விரும்பியபடி மாற்றிக் கொண்டே செல்வதால் அவற்றை தடுத்து அழிப்பது எளிதல்ல.

1,000 கிலோ வெடிபொருளை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்கை செஜ்ஜில் ஏவுகணை தாக்கக் கூடியது. ஈரானின் செஜ்ஜில் ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டதாகும். 2,000 கி.மீ.க்கு மேல் சென்று தாக்கக் கூடிய செஜ்ஜில் திட எரிபொருள் நிரப்பப்பட்ட ஏவுகணை ஆகும். திட எரிபொருள் நிரப்பப்பட்ட செஜ்ஜில் ஏவுகணைகளை நடமாடும் ஏவுதளத்தில் இருந்தே ஏவ முடியும். ஈரானின் செஜ்ஜில் ஏவுகணை 23 டன் எடையும் 60 அடி உயரமும் கொண்டதாகும்.

error: Content is protected !!