Skip to content

தவெக உடன் அதிமுக கூட்டணி வைக்க தயாரா?…. திருச்சியில் திருமா பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான கருரில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுகிறோம்.
பாதிக்கப்பட்டவர்கள் எதன் அடிப்படையில் சிபிஐ விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை..
கரூர் சம்பவம் நெரிசலால் ஏற்பட்டதல்ல. வேறு யாரோ தூண்டுதலின் பேரில் நடந்ததாக அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் திசை திரும்ப பார்க்கிறார்களோ என்று விமர்சனமும் கூடவே எழுகிறத
நெரிசல் சாவு பிறரால் தூண்டப்பட்டு நடத்துவது அல்ல. தன்னார்வத்தோடு வரக்கூடிய தொண்டர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அதிகரிக்கும் போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
இது போன்ற சம்பவங்கள் பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன நெரிசலால் ஏற்பட்ட உயிர் இழப்பு துயர சம்பவம் நடந்துள்ளது. எதற்காக அவர்கள் சிபிஐ விசாரணை கேட்கிறார் என்று தெரியவில்லை..

கரூர் சம்பவத்தில் இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளை சொல்வதே பிஜேபியின் வாடிக்கையாக உள்ளது..
கற்பனையாகவும், யுகமாகவும் பல செய்திகளை நயினார் நாகேந்திரன் பரப்புகிறார்.
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமித்த பிறகும் அண்ணாமலை தான் தலைவர் போன்று மனநிலையில் ஏதேதோ பேசி வருகிறார்.
விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்படப் போகிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் செல்வாக்கு பெற்று இயங்கக்கூடிய தலைவராக இருக்கிறார். அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு எந்த சூழலும் இல்லை. அதை அண்ணாமலை தான் விளக்க வேண்டும்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்க்கு நிறைய அனுபவம், படிப்பினை கிடைத்திருக்கிறது அதனால் அவர் பின்னால் யாரும் வர வேண்டாம். தொண்டர்கள் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க வர வேண்டாம் என கோரிக்கை வைப்பது தவறில்லை.

கரூர் சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்தது குறித்து நீதிபதிகள் தான் விளக்க வேண்டும்..
அதிமுக ,தமிழக வெற்றி கழகம் கூட்டணி ஏற்படும் என கூறுவது அதிமுக தரப்பில் பரப்பப்படும் வதந்தி.
பாஜகவை கழற்றி விட்டுவிட்டு தவெக.வோடு கூட்டணி வைக்க அதிமுக தயாராக இருக்கிறார்களா?
அண்ணாமலை விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது இருசக்கர வாகனத்தின் மீது என்னுடைய கார் மோதியதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.
அண்ணாமலை எந்த புலனாய்வு அமைப்பு மூலம் அதனை உறுதி செய்தார்.
அந்த சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்டவருக்கும், அண்ணாமலைக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது..
திருமாவளவன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஏதாவது பிரச்சனை ஏற்படுத்துங்கள் என பிஜேபி,ஆர் எஸ் எஸ் போன்றவர்கள் இந்த வேலையை செய்துள்ளார்கள். விபத்து சம்பவம் குறித்து ஊடகங்களில் தவறான செய்தியை பரப்பி உள்ளனர். இவ்வாறு தொல் திருமாவளவன் கூறினார். பேட்டியின் போது மாநில துணைச் செயலாளர், கவுன்சிலர் பிரபாகரன், மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!