Skip to content

பொள்ளாச்சி அருகே லாரி மீது பைக் மோதி ஐடி ஊழியர் பலி…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் கோவை பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் சிங்கராம்பாளையம் பிரிவு அருகில்
இன்று காலை 400சிசி கொண்ட பைக்கை பொள்ளாச்சி அடுத்துள்ள பெரியா கவுண்டனூரைச் சேர்ந்த கலையரசன் என்பவரது மகன் ஜெயராமன் வயது (25)இவர் கோவையில் ஐடி ஊழியராக பணியாற்றி வந்தார்.

இனறுகாலை வேலைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.   கோவை &பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு சிங்கராம் பாளையம் பிரிவு அருகில் முன்னாள் சென்ற லாரி  திரும்ப நின்ற போது அதிவேகமாக வந்த பைக் எதிர்பாராத விதமாக லாரி முன்பக்கம் மோதி சுமார் 50 அடி தூரத்திற்கு இருசக்கர வாகனம் தனியாக இழுத்துச் செல்லப்பட்டது. இதில் வாலிபர் ஜெயராமன் கீழே விழுந்தார்.

ஆனால் இருசக்கர வாகனம் அங்கிருந்து தரதரவனை இழுத்து சாலையோரம் விழுந்தது .இதில் இருசக்கர வாகனம் மலமலவென தீப்பிடித்து எறிய தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவு போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்து கிடந்த வாலிபர் ஜெயராமனை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர்இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட தீயை போலீசார் அனைத்தனர். இதில் இருசக்கர வாகனம் எரிந்து எலும்பு கூடாக காட்சியளித்தது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற வாலிபர் ஜெயராம் தற்போது மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!