Skip to content

அதிமுகவை தோழமையாக விஜய் கருதுவது போல் உள்ளது”… திருமா..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பதூர் மாவட்டம், பொத்தூரில் உள்ள நினைவிடத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று மரியாதை செலுத்தினார்.

'பெண்களை விரட்டிய காரில் கட்சி கொடி கட்டியதாலேயே திமுக என ஆகிவிடாது'- திருமாவளவன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுகவைப் பற்றி பேசிய விஜய், அதிமுகவை பற்றி ஏன் பேசவில்லை என்று தெரியவில்லை. திமுக, பாஜக மீது எதிர்ப்பு, ஆனால் அதிமுகவை தோழமை கட்சியாக விஜய் கருதுவது போல் தெரிகிறது. தமிழர்களுக்கு எதிரானது என்ற முறையில் பாஜகவை தவெக தலைவர் விஜய் எதிர்க்கிறார். தவெகவின் கொள்கை எதிரி பட்டியலில் அதிமுக உள்ளதா? இல்லையா? ஆளுங்கட்சியான திமுகவை எதிர்ப்பது இயல்பானது.

பாமக இரண்டாகப் பிரிய வாய்ப்பே இல்லை. ராமதாஸும் அன்புமணியும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்பார்கள். பரந்தூர் மக்களுடன் கோட்டை நோக்கிச் சென்று போராடுவேன் என தவெக தலைவர் விஜய் கூறுகிறார். பரந்தூர் மக்களுக்கு நீதி கிடைக்குமென்றால் விஜய் கூறியதை வரவேற்கிறேன்” என்றார்.

error: Content is protected !!