Skip to content

பானி பூரிக்கு ஆசைப்பட்ட பெண்… வாயை மூட முடியாமல் தவித்த பரிதாபம்

  • by Authour

உத்தரப் பிரதேச மாநிலம், ஔரையா மாவட்டத்தில் திபியாபூர் பகுதியைச் சேர்ந்தவர் இன்கலா தேவி (42) இவர் பானி பூரி சாப்பிடுவதற்காக வாயைத் திறந்தபோது அவரது தாடை விலகியதாக கூறப்பட்டது. தாடை விலகியதால் கடும் அவதி அடைந்தார். இதனையடுத்து வாயை மூட முடியாமல் தவித்த தேவியை அவரது உறவினர்கள் முதலில் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் மனோஜ் குமார் மற்றும் சத்ருகன் சிங் ஆகியோர் தாடையை மீண்டும் அதன் இடத்திற்குக் கொண்டு வர முயற்சித்தனர், ஆனால் வெற்றி பெறவில்லை.இதனையடுத்து, அவர் சிறப்புச் சிகிச்சைக்காகச் சிச்சோலி மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

மருத்துவர் சத்ருகன் சிங் கூறுகையில், அவர் அதிகமாக வாயைத் திறந்ததால் தாடை விலகி இருக்கலாம் என்றும், இது போன்ற நிலை சாப்பிடும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படலாம் என்று தெரிவித்தார். பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார் இன்கலா தேவி.

error: Content is protected !!