அரியலூர் பேருந்து நிலையம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தினை உறுதிப்படுத்திட வேண்டும். ஜாக்டோ – ஜியோ ஊழியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய – மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தற்போது SIR பணிகளில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் கட்டாயமாக பணியமர்த்தப்பட்டுள்ளதால், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும், இதனால் ஆசிரியர்கள் தங்கள் முதன்மை கல்வி பணிகளை செய்ய முடியாமல், பள்ளி மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாவதாகவும்,மேலும் SIR பணிகளால் தாங்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், ஆசிரியர்களுக்கு SIR பணிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து SIR பணிகளில் ஆசிரியர்கள் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டால், ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கடும் போராட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

