Skip to content

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி காளை வெற்றி

  • by Authour

மதுரை  அலங்காநல்லூரில் இன்று  ஜல்லிக்கட்டு போடடி நடந்து வருகிறது.  1000க்கும் மேற்பட்ட காளைகள் இதில் பங்கேற்று களமாடி வருகிறது.   வீரர்களும் பாய்ந்து சென்று காளைகளை அடக்கி  வருகிறார்கள்.  இந்த போட்டியில்  முன்னாள் அதிமுக அமைச்சர்கள்  டாக்டர் விஜயபாஸ்கர்,  செல்லூர் ராஜூ ஆகியோரின் காளைகள்   வெற்றி பெற்றன. அந்த காளைகளுக்கான  பரிசுகளை  துணை முதல்வா் உதயநிதி  ஸ்டாலின் வழங்கினார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண   வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும்  மைதானத்திற்கு வந்திருந்து போட்டியை கண்டு ரசித்தனர்.

இதுபோல கரூர் மாவட்டம்  குளித்தலை அருகே உள்ள  ஆர்.டி. மலையில் இன்று ஜல்லிக்கட்டு கோட்டி நடந்து வருகிறது. இதில்  அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் காளையும்  கலந்து கொண்டது. இந்த காளையை யாரும  பிடிக்கவில்லை.  எனவே  அசோக்குமாரின் காளைக்கு பரிசு வழங்கப்பட்டது.

 

error: Content is protected !!