Skip to content

ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரின் நவ்ஷேரா பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே இன்று மாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் 2 பேர் ஊடுருவ முயற்சிக்கின்றனர் என இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, நவ்ஷேரா பிரிவின் ஜங்கார் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் 2 பேர் கண்டறியப்பட்டனர். இதனையடுத்து நடந்த துப்பாக்கி சண்டையில், அவர்களில் ஒரு பயங்கரவாதி படுகொலை செய்யப்பட்டார்.

அவர்களின் ஊடுருவல் முயற்சி உடனடியாக முறியடிக்கப்பட்டு உள்ளது. சுட்டு கொல்லப்பட்ட அந்நபர் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, தப்பியோடிய மற்றொரு பயங்கரவாதியை தேடும் பணி மற்றும் வேறு யாரேனும் பதுங்கி உள்ளனரா? என கண்டறியும் பணி நடந்து வருகிறது.

error: Content is protected !!