Skip to content

மஞ்சள் காமாலைக்கு வாலிபர் பலி- திருவாரூரில் சோகம்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கிளரியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (38). கடந்த சில நாட்களாகக் கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவருக்கு, பரிசோதனையில் மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் உள்ளூரில் சிகிச்சை பெற்று வந்த சிலம்பரசனின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், கல்லீரல் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 38 வயதே ஆன சிலம்பரசன் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் கிளரியம் கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!