ஜெயங்கொண்டம் கடைவீதியில் உள்ள தனியார் பாத்திரக்கடை உரிமையாளரிடம் ரூ 2 லட்சம் பணம் கேட்டு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சித்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பு கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (69). இவர் ஜெயங்கொண்டம் கடைவீதியில் உள்ள ஒரு தனியார் பாத்திரக்கடை ஒன்றில் தினக்கூலி அடிப்படையில் கடந்த 26 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். திடீரென காரணம் இல்லாமல் தன்னை வேலையை விட்டு நிறுத்தி விட்டதால்,

தனக்கு வாழ்வாதாரம் ஏதும் இல்லாததால் உள்ளது. மேலும் கடந்த 26 ஆண்டுகளாக பணிபுரிந்த நிலையில், தனக்கு ரூபாய் 2 லட்சம் பணம் தர வேண்டும் என கேட்டு தனியார் பாத்திரக்கடை முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து செல்வராஜ் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். ஜெயங்கொண்டம்

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, முதியவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி, அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் கடைவீதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

