அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு என்பவரது மகன் நீதிபதி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் மெயின் ரோட்டில் உள்ள தண்ணீர் பந்தல் என்ற ஏரியில் நேற்று மாலை 5 மணி அளவில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.
ஏரி கரையோரத்தில் நீதிபதி ஆடைகளை கழட்டி வைத்து விட்டு குளிக்க சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தேடியும் கிடைக்காத நிலையில் ஏரிக்கு கரையோரம் கழட்டி வைக்கப்பட்ட ஆடைகள் மட்டுமே இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஜெயங்கொண்டம் போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையை தீவிர
படுத்திய நிலையில் இடைவிடாமல் மழை பெய்வதாலும் இருள் சூழ்ந்துள்ளதாலும் பணி நிறுத்தப்பட்டது.
தற்போது மீண்டும் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குளிக்க சென்ற நீதிபதி காணாமல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுததிய நிலையில்
நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் இரவு பகலாக மழை என்று பாராமல் தேடி வந்த நிலையில் தற்பொழுது பத்து மணி அளவில் நீதிபதியின் உடல் சடலமாக மீட்கப்பட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் போலீசார் அனுப்பி வைத்தனர் மேலும் அவர் தவறி விழுந்தாரா அல்லது குளிக்க சென்றபோது இறந்தாரா அல்லது வேறு யாரேனும் கொலை செய்திருப்பார்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்