Skip to content

உலக கோப்பை கிரிக்கெட் வாழ்த்திலும் அரசியல் செய்யும் காங்கிரஸ், பாஜக

  • by Authour

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக கோப்பை இறுதிப்போட்டி நேற்று  அகமதாபாத்தில்  நடந்தது. இந்த போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய  மக்களும்  ஆவலோடு காத்திருந்தனர். தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின்  இந்திய அணி வெல்ல தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில்  தங்களது எக்ஸ் வலைத்தள பதிவில் jeetega india(வெல்லட்டும் இந்தியா)  என வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

ஆனால் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்து விட்ட நிலையில் ,  போட்டி முடிந்த பின்னர் காங்கிரஸ் கட்சி சார்பில்  தங்களது வலைத்தள பதிவில், ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன்,   to  our men in blue(இந்திய அணியின் ஜெர்சி நிறம் ) நீலம் என்பதை குறிப்பிட்டு விளையாட்டில்  உங்கள்(இந்தியா) ஆதிக்கம் இதோடு முடிந்து விடவில்லை. , இந்த தொடர் முழுவதும் உங்கள் ஆதிக்கம் தான் போட்டிகளில் இருந்தது என கூறி உள்ளது.

காங்கிரசின் இந்த இரண்டு வலைத்தள பதிவுகளையும் பாரதிய ஜனதா வெளியிட்டு உள்ளது. காங்கிரஸ் இப்போது இந்தியா கூட்டணி அமைத்து உள்ளது. எனவே  வெற்றி  ெ பற வாழ்த்தும்போது ஜிதேகா இந்தியா என்று வாழ்த்தியது. தோல்வி அடைந்ததும் இந்தியா என்ற வார்த்தையை அந்த கட்சி பயன்படுத்தவில்லை என அதில் குறிப்பிட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!