கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திம்மாச்சிபுரம் சிவன் கோவில் அருகே கிருஷ்ணன் மகன் கார்த்திக் (36). விவசாயி. மனைவி சண்முக நதியா இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடன் நேற்று இரும்பூதிப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் இன்று காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கபட்டு இருப்பதைக்
கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டும் அதில் இருந்த ரூபாய் 2 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 10 பவுன் தங்க நகைகள் திருடுப் போனது. லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் புஷ்பகனி தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து கரூரிலிருந்து கைரேகை நிபுணர் உதவி ஆய்வாளர் சரண்யா கைரேகைகள் பதிவுகள் செய்தார். திருச்சி கரூர் பேசி நெடுஞ்சாலையில் உள்ள குடியிருப்பில் மர்ம நபர் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு போன சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.