பெயிண்டர் மயங்கி விழுந்து சாவு…
திருச்சி வரகனேரி பஜார் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் செல்வ விநாயகம் (39) இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்த பொழுது திடீரென்று மயங்கி விழுந்தால். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் செல்வ விநாயகம் இறந்து விட்டதாக கூறினார்.இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
குடும்ப தகராறு… தற்கொலை
திருச்சி அரியமங்கலம் சீனிவாச நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65) இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மனைவிகள் உள்ளனர்.முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள். உள்ளனர். இந்நிலையில் முதல் மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து சென்று விட்டார் .இதைபடுத்து கடந்த பல வருடங்களுக்கு முன்பு செல்வராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரண்டாவது மனைவி இறந்து விட்டார். இதையடுத்து செல்வராஜ் கடந்த மூன்று மாத காலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த செல்வராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தனியார் கம்பெனி மேனேஜரிடம் நகை பறிப்பு
சென்னை சாலிகிராமம் நேரு நகரை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரன் (59) இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மண்டல மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அந்த கம்பெனியின் திருச்சி கிளைக்கு வருகை புரிந்த சுபாஷ் சந்திரன் செந்தண்ணீர் புரம் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மூன்று மர்ம ஆசாமிகள் சுபாஷ் சந்திரனிடம் செலவுக்கு பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் பணத்தை தர மறுப்பு தெரிவித்ததால் சுபாஷ் சந்திரன் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.இந்த சம்பவம் குறித்து சுபாஷ் சந்திரன் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சந்தேகத்திற்கிட மாக சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் பெயர் சந்தோஷ் குமார் (25) பாலமுருகன் (வயது 35)என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பேரையும் கைது செய்து ஒரு பவுன் நகையை மீட்டு உள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
+ 1 மாணவர் தற்கொலை
திருச்சியில் 11 ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி, தெற்கு காட்டூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் ஹரிகிருஷ்ணன் (16). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில்,நேற்று (செவ்வாய்க்கிழமை) அவரது தாயார் கீதா வெளியில் சென்று விட்டு பகல் 12 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் ஹரி கிருஷ்ணன் தூக்கில் தொங்கியுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஹரி கிருஷ்ணனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஹரிகிருஷ்ணன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து திருவெறும்பூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சியில் 1400 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். வின்சென்ட் உத்தரவின் பேரில், தனிப்படை போலீஸார் ரேசன் அரிசி மற்றும் உணவு பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருச்சி அரியமங்கலம், திடீர்நகர், அம்மாக்குளம், காமராஜ் நகர், அம்பிகாபுரம் ஆகிய பகுதிகளில் ரோந்து மேற்கொண்டபோது, ஜோதிநகர் பகுதியில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸார் நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் அங்கு அ. அக்பர்பாஷா (45) என்ற நபர் ரேசன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்ததும், மேலும் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கால்நடைகள் மற்றும் கோழித்தீவனம் தயாரிக்க கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் 28 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1400 கிலோ ரேசன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்து, அக்பர் பாஷாவையும் கைது செய்தனர்.
