Skip to content

கோவிலில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

புதுச்சேரி ரோடியார்பேட் பகுதியில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலின் அர்ச்சகர் நேற்று இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இன்று வழக்கம்போல் அதிகாலை பூஜைக்காக கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட தாலி செயின், நெக்லஸ் உள்பட சுமார் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆபரணங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மன் கோவிலில் நகைகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!