Skip to content

தர்மசாலாவில் கிடைத்தது பெண்களின் எலும்பா? ஆய்வு தொடங்கியது

 கர்நாடக மாநிலம்  தர்மஸ்தலாவில்தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம்(ஜூன்) 3-ந்தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம்  எழுதினார். தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை பணியாளர் மங்களூரு கோர்ட்டில் ஆஜராகி நீதிபதி முன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் தன்னுடன் சில எலும்புகளையும்  எடுத்து வந்திருந்தார்.

 கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொன்று புதைக்கப்பட்டதாக கூறினார்.

 இந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் தர்மசாலா  மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக அவர் கூறினார். இதைத்தொடர்ந்து  கூடுதல் டிஜிபி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு   தூய்மை பணியாளர் அடையாளம் காட்டிய 13  இடங்கள் தோண்டப்பட்டது.

 மூன்றாவது நாள் நடந்த பள்ளம் தோண்டும் பணியில், அடையாளக் குறியிடப்பட்ட ஆறாவது இடத்தில் இருந்து 12 எலும்புக்கூடுகள், ஒரு மண்டை ஓடு சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சிக்கிய எலும்புக்கூடுகள், மண்டை ஓடு, உடுப்பி மணிப்பால் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மறுநாள் ஒரு இடத்தில் தோண்டியபோது ஒரு கைக்குட்டை மட்டும் சிக்கியது.

அடையாளம் காட்டப்பட்ட  9 முதல் 13 வரையிலான இடங்களில் தான்,  அதிகமான உடல்களை புதைத்ததாக புகார்தாரரும், அவரது வக்கீல்களும், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் முன் தொடர்ந்து, உறுதியாக கூறி வருகின்றனர்.  எனவே  பலத்த பாதுகாப்புடன் அங்கும் தோண்டும் பணி நடந்தது.  இந்த இடங்களில் தர்மசாலாவில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில் உள்ளது எனவே அங்கு மக்கள் அதிக அளவில் திரண்டனர்.
நேத்ராவதி ஆற்றங்கரையோரம் அடையாளம் காணப்பட்ட, முதல் இடத்தை தோண்டியபோது ஒரு பெண் பெயரில் இருந்த ஏ.டி.எம்., கார்டு, ஆண் பெயரில் இருந்த பான் கார்டு சிக்கியது.

இரண்டு கார்டுகளையும் வைத்து, போலீசார் விசாரித்தபோது ஏ.டி.எம்., கார்டு சித்தலட்சுமம்மா என்பவருக்கும், பான் கார்டு சித்தலட்சுமம்மா மகன் சுரேஷ் என்பவருடையது எனவும் தெரிந்தது.

இவர்கள் பெங்களூரு ரூரல் நெலமங்களா தாலுகா வீரசாகர் கிராமத்தை சேர்ந்தவர்கள். நேற்று முன்தினம் இரவு நெலமங்களா போலீசார், சித்தலட்சுமம்மா வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரித்தனர்.

போலீஸ் விசாரணையில், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு இருந்த சுரேஷ், 29, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் இறந்தது தெரிய வந்துள்ளது. சித்தலட்சும்மாவின் ஏ.டி.எம்., கார்டு சுரேஷிடம் தான் இருந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தர்மஸ்தலாவுக்கு சுரேஷ் சென்றபோது ஏ.டி.எம்.,கார்டு மற்றும் பான் கார்டு காணாமல் போய் உள்ளது. பள்ளம் தோண்டும்போது தற்போது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

13 இ்டங்களிலும் தோண்டி பார்த்தபோது 100க்கும் மேற்பட்ட எலும்புகள், மண்டை ஓடுகள் கிடைத்தன. அவை ஆண் எலும்பா, பெண் எலும்பா  என முதல்கட்டமாக ஆய்வு நடந்து வருகிறது.அவை பெண் எலும்புகளாக இருந்தால் வழக்கு மேலும்  சூடுபிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!