காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் விவரம்:
அதலெடிக்ஸ்-8, பேட்மிண்டன்-3, கூடைப்பந்து-2, பில்லியார்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர்ஸ்-1, கிரிக்கெட்-4, கால்பந்து-2, கோல்ப்-2, ஜிம்னாஸ்டிக்ஸ்-6, ஹாக்கி-2, கபடி-1, துப்பாக்கி சுடுதல்-2, ஸ்குவாஷ்-1, நீச்சல்-2. டேபிள் டென்னிஸ்-2, டென்னிஸ்-3, வாலிபால்-3, யோகா-2.
பணியிடங்கள் விவரம்:
1. வரி உதவியாளர்: 18 இடங்கள். சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100.
வயது வரம்பு: 18 முதல் 27க்குள். தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. பல்நோக்கு பணியாளர்: 28 இடங்கள். சம்பளம்: ரூ.18,000- ரூ.56,900. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் விளையாட்டு சாதனைகள், உடற்தகுதி, மருத்துவ தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.2024ம் ஆண்டிற்கு பிந்தைய விளையாட்டு சாதனைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மருத்துவத் தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வு, விளையாட்டுத் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதுபற்றிய விவரம் இ.மெயிலில் தெரிவிக்கப்படும்.
விளையாட்டு தகுதி: சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவுகள் ஏதாவது ஒன்றில் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவில் விளையாடி குறைந்தது 3வது இடம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.incometaxgujarat.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.02.2026.

