Skip to content

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

தஞ்சாவூர் விற்பனைக்குழு, பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். பருத்தி ஏலத்தில், கும்பகோணம், இதைச் சுற்றியுள்ள கிராமங்கவில் இருந்து 870 விவசாயிகள் சராசரி 1025 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். இதில் கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், திருப்பூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சார்ந்த 10 வணிகர்கள் பங்கேற்று, அதிகப் பட்சம் குவிண்டாலுக்கு ரூ.7329, குறைந்தப் பட்சம் ரூ.5500 சராசரி ரூ.6569 என விலை நிர்ணயம் செய்தனர். பருத்தியின் மதிப்பு சராசரி ரூ 67 லட்சத்து 03 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!