Skip to content

தர்காவிலும் ரஜினி பிரார்த்தனை….. படங்கள்….

நடிகர் ரஜினி  12-ம் தேதி தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி திருப்பதி

ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று திருப்பதிக்கு சென்றார். அங்கு அவருக்கு தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த ரஜினி , பின்னர் கடப்பாவுக்கு சென்றார். அங்கு, இசையமைப்பாளர் ஏ.ஆ.ர் ரஹ்மானுடன் கடப்பா தர்காவுக்கு சென்று ரஜினி பிரார்த்தனை செய்தார். அங்கு இருவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!