இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் வார்ப்படங்களான கமல், ரஜினி ஆகியோர் ஆரம்பத்தில் இணைந்து பல படங்களில் நடித்தனர். 16 வயதினிலே , மூன்று முடிச்சு, இளமை ஊஞ்சலாடுகிறது., அபூர்வ ராகங்கள்’, ‘அவர்கள்’, ‘நினைத்தாலே இனிக்கும்’ என பல படங்களில் நடித்தனர். அவர்கள் கடைசியாக 1979-ல் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
அதன் பிறகு அவர்கள் இருவரும் தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்களாக ஆகி விட்டதால் இருவரும் இனி ஒன்றாக நடிக்க வேண்டாம் என முடிவெடித்து கடந்த 46 வருடங்களாக அதை செயல்படுத்தி காட்டி வருகிறார்கள். ரஜினி திரையுலகின் பொன்விழா கொண்டாடி வருகிறார். கமலின் முதல் திரைப்படம் களத்தூர் கண்ணம்மா வெளியாகி 65 வருடங்கள் ஆகி விட்டது.
இந்த நிலையில் இவர்கள் இருவரையும் இணையவைத்து மீண்டும் படம் தயாரிக்கலாமா என்ற எண்ணம் தற்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜூக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்காகவே ஒரு கேங்ஸ்டர் கதையை லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருக்கிறாராம். அந்த படத்தை கமலில் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்னும் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை கூட தொடங்கவில்லை என்றபோதிலும் இதற்கான பணிகள் நடந்து வருகதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி இணைந்தால் 46 வருடங்களுக்கு பிறகு அவர்கள் இணையும் படம் பிரமாண்டமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.