மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் நடிகரும் மக்கள் நீதி மைய கட்சித் தலைவருமான கமல்ஹாசன். திமுக மற்றும் அதன் கூட்டணி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் எம்பி ஆகிறார். திமுக அதிமுக கட்சிகளுக்கு மாற்று என கட்சி தொடங்கிய கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினர் என்ற அளவில் நிறுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்து கூறியுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ள கமலுக்கு அன்பு வாழ்த்துகள் கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கப்போவதை எண்ணி மகிழ்கிறோம். தமிழ்நாட்டின் உரிமை, இந்திய அரசமைப்பை, பன்முகத்தன்மையை பாதுகாக்க கமல் குரல் ஓங்கி ஒலிக்கும்” எனக் கூறியுள்ளார்.