புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சி சீகம்பட்டி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் தின விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் அ.சகாய செல்வி தலைமை வகித்தார். பெருந்தலைவர், கல்விக்கண் திறந்த காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செல்வலெட்சுமி முன்னிலை
வகித்தார். பள்ளி குழந்தைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். பள்ளிஆசிரியர் வெ.செல்வம். பள்ளி மேலாண்மை குழு தலைவி அ.சுந்தரவள்ளி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி குழந்தைகள், ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.