கஞ்சா கும்பலுடன் தொடர்பு..திருச்சியில் 2 போலீசார் அதிரடி மாற்றம்..

428
Spread the love

திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் காவல்நிலையத்தில் குமரேசன் மற்றும் ராம்குமார் ஆகியோர் காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், அதேபகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு, பணம் பெற்றுகொண்டு உடந்தையாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், பணிக்கு விடுமுறை எடுத்துகொண்டு மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து கார் மூலம் திருச்சிக்கு கஞ்சாவை கடத்தி வருதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயாவிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய ஆனிவிஜயா, காவலர்கள் குமரேசன் மற்றும் ராம்குமாரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY