Skip to content

கராத்தே சிலம்பம் போட்டி…. திருச்சி அரசு பள்ளி மாணவி உலக சாதனை….

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் மருதை – ஹேமலதா இவர்களுடைய மகள் ஸ்ரீமதி ( 16 )தொட்டியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார் .இவர் சிறு வயதில் கராத்தே ,யோகா, சிலம்பம் பயிற்சி பெற்றுள்ளார். மேலும் திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல கராத்தே டேக்வாண்டோ யோகாகிராண்ட் மாஸ்டர் கின்னஸ்உலக சாதனையாளர்டாக்டர் டிராகன் ஜெட்லியிடம் பயிற்சி பெற்று வருகிறார் .அண்மையில் உடுமலைப்பேட்டையில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் இரண்டுபோட்டியில் முதலிடம் பெற்றார். தேசிய உலக சாதனை போட்டியில் சிலம்பம் யோகாவில் சாம்பியன் பட்டம் பெற்றார் .30 வினாடியில் 45 செங்கல்லை உடைத்து உலக சாதனை படைத்து ஜெட்லி புக் ஆப் ரெக்கார்சில் இடம் பெற்றுள்ளார். கராத்தேயில் உயர்ந்த பெல்ட் பிளாக் பெல்ட் கிராண்ட் மாஸ்டர் டாக்டர் டிராகன் ஜெட்லியிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் .மேலும் இவர் சகோதரர் மேகநாதன் தொட்டியம் புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார் பல்வேறு போட்டியில் பரிசு சாதனைகள் பற்றியவர் கராத்தே பயிற்சியில் ஆரஞ்சு பல்பு பெற்றுள்ளார் . ஸ்ரீமதி திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் ஆகியோரிடம் பாராட்டு பெற்றுள்ளார். இவர்களுடைய சாதனைகளை சமூக அலுவலர்களும் ஆசிரியர்களும் பாராட்டினர்.

error: Content is protected !!