Skip to content

தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44-வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே ஹல்தார் தலைமையில் டெல்லி பிகாஜி காமா பிளேசில் உள்ள எம்.டி.என்.எல் கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் தொடக்கத்தில் 4 மாநிலங்களிடம் நீரியல் தரவுகள் சேகரிக்கப்பட்டன.

தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து தரவேண்டிய நீர் விவகாரம், நீர்த் திறப்பு தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இறுதியில், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மேலாண்மை ஆணையம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி ஆற்றில் இருந்து அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

error: Content is protected !!