கர்நாடக மாநிலத்தின் கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜண்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், ராகுல் காந்தியின் “வாக்கு திருட்டு” குற்றச்சாட்டை விமர்சித்ததற்காக காங்கிரஸ் உயர்மட்டம் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியதை அடுத்து, கர்நாடக கூட்டுறவு அமைச்சர் கே.என். ராஜண்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். “காங்கிரஸில் உள் ஜனநாயகம் இல்லை என்பதை இது தெளிவுபடுத்துகிறது” என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர் அசோகா கூறியுள்ளார் .
