ஒரு வழி அடைக்கப்பட்டால் பல வழிகள் திறக்கப்படும் என்பார்கள். எனவே இளைஞர்கள் ஒரு தோல்வி ஏற்பட்டால் அப்படியே வாழ்க்கையே போய்விட்டது என முடங்கி விடாமல் முயற்சி செய்தால் சாதிக்கலாம் என்பதை கர்நாடக மாணவி ரிதுபர்ணா நிரூபித்து காட்டி உள்ளார்.
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் ரிதுபர்ணா (20). படிப்பில் படுசுட்டி. பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றார். வழக்கம் போல டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை ரிதுபர்ணாவுக்கும் இருந்தது. நீட் எழுதினாா. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை.
இதனால் அவர் சோர்ந்து விடவில்லை. மருத்துவம் வேண்டாம். பொறியியல் துறைக்கு செல்வோம் என அடியாரில் உள்ள சயாத்ரி பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன் பொறியியல் பிரிவில் சேர்ந்தார்.
அங்கும் கடினமாக உழைத்தார். தற்போது இறுதி ஆண்டு பயின்று வருகிறார். அந்த கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது. ரிதுபர்ணாவும் அதில் பங்கேற்றார். அவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72.2 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. இதனால் கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் யூ.டி.காதர் சயாத்ரி கல்லூரிக்கு சென்று ரிதுபர்ணாவுக்கு மைசூரு தலைப்பாகை, சால்வை, பூங்கொத்து கொடுத்து பாராட்டினார். மாநிலத்தில் உள்ள பல்வேறு கல்வியாளர்களும் ரிதுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதன் மூலம் சிங்கப்பூர், ஜப்பான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை சேர்ந்த ரோபோட்டிக்ஸ் நிபுணர்களின் அறிமுகம் கிடைத்தது. மேலும் இங்கிலாந்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸில் ஜெட் இன்ஜின் தயாரிப்பு நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் ஆக ஓராண்டு பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. இதற்காக எனக்கு ஆண்டுக்கு ரூ.39.58 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டது.
அந்த பயிற்சி காலத்தில் எனது முழு கவனத்தையும் செலுத்தி கடினமாக உழைத்தேன். ஜெட் விமானத்தின் இன்ஜின் தயாரிக்கும் பிரிவில் எனது பரிந்துரைகள் பெரிதும் ஏற்கப்பட்டன. இதன் காரணமாக கடந்த மாதத்தில் எனக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72.2 லட்சம்(மாதம் 6 லட்சத்து 16ஆயிரம் ரூபாய்) சம்பளத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
அதற்கான பணி நியமன கடிதத்தை பெற்றதும் என் பெற்றோரிடமும், கல்லூரி நிர்வாகத்திடம் காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தேன்.
என்னைப் பொறுத்தவரை, தோல்விகளை கண்டு அச்சப்படாமல் இளைஞர்கள் புதிய துறைகளில் உற்சாகத்துடன் போராடினால், நிச்சயம் இமாலய வெற்றி கிடைக்கும். நான் எனது மருத்துவர் கனவு சிதைந்த போதும், துவளாமல் வேறு துறையில் ஆர்வமோடு இயங்கினேன். இப்போது இளம் பொறியாளராக, படிப்பை முடிக்கும் முன்பாகவே ரூ.72 லட்சம் சம்பளத்துக்கு வேலை செய்கிறேன். இதன் மூலம் எனது பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவேன்.” என்றார்.