முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டிபுதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் உள்ள
முன்னாள் முதல்வர்
கருணாநிதி திருவுருவச் சிலைக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்வை.முத்துராஜா, வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர்
அரு.வீரமணி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் கவிதைப்பித்தன், கார்த்திக் தொண்டைமான், மற்றும் த.சந்திரசேகரன், சுப.சரவணன்,கே.எஸ்.சந்திரன்
,பெ.ராஜேஸ்வரி,ராஜேஸ் ,தட்டாம்பட்டி ஆறுமுகம் , டீ ஸ்டால்சேகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
