Skip to content

கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. மு.க.முத்து உடல் சென்னை ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது பூக்காரி படத்தில் தொடங்கி பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையா விளக்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மு.க.முத்து.

1948 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பிறந்த இவர்,  முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன். மு.கருணாநிதியின் மூத்த மனைவியும் சிதம்பரம் ஜெயராமன் சகோதரியுமான பத்மாவதி இவரின் தாயார் ஆவார். தந்தையின் கலையுலக வாரிசாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

 

error: Content is protected !!