Skip to content

கருணாநிதியின் நினைவு தினம்… அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேரணியாக சென்று அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியாக சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைத்தை முன்னிட்டு அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சரும் அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் அக்கட்சியினர் 5

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமைதிப் பேரணி நடத்தினர். அரியலூர் சத்திரம் பகுதியில் தொடங்கிய அமைதிப்பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோன்று மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் ஆங்காங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மு.கருணாநிதி அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியும், அன்னதானம் வழங்கியும் அவரது ஏழாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

error: Content is protected !!