Skip to content

கரூரில் வேன் மோதி கிளீனர் பலி

  • by Authour

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலிருந்து தேங்காய் லோடு ஏற்றிய  லாரி ஒன்று அசாம் மாநிலத்திற்கு ஓட்டுநர் சசிகுமார் மற்றும் கிளீனர் கோபி ஆகியோருடன் சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியானது இன்று அதிகாலை கரூர் வழியாக செம்மடை மேம்பாலம் அருகில் வந்தபோது டீசல் தீர்ந்துள்ளது.

இதனால் எரிபொருள் நிரப்புவதற்காக லாரியின் கிளீனர் கோபி வண்டியில் இருந்து கீழே இறங்கி டீசல் நிரப்பி விட்டு முன் பக்க டயர்களுக்கு நடுவே வண்டியை பம்ப் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தூத்துக்குடியில் இருந்து உப்பு லோடுடன் சேலத்தை நோக்கி வந்து கொண்டிருந்த ஈச்சர் வாகனத்தின் ஓட்டுனர் கோவிந்தன் எரிபொருள் நிரப்புவதற்காக நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார்.

இந்த விபத்தில் லாரி டயர்களுக்கு நடுவில் நின்று கொண்டிருந்த கிளீனர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதேபோல் விபத்து ஏற்படுத்திய ஈச்சர் வாகனத்தின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதில், அதன் ஓட்டுனர் கோவிந்தன் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தார்.

வாங்கல் போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட ஈச்சர் வாகன ஓட்டுனர் கோவிந்தனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கிளீனர் கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!