Skip to content

கரூர்…தூய்மை பணியாளர்களுக்கு 791க்கு- பதிலாக ரூ.400 மட்டும் வழங்குவதாக மேயரிடம் குற்றசாட்டு..

  • by Authour

ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த 791 ரூபாய்க்கு பதிலாக ஒப்பந்ததாரர்கள் 400 ரூபாய் மட்டும் வழங்கப்படுவதாக கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் குற்றச்சாட்டு.

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் மேயர் கவிதா தலைமையிலும் ஆணையர் சுதா முன்னிலையில் நடைபெற்றது.இதில் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள், கரூரில் அண்மையில் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 84 கடைகளுக்கு வாடகை மிக குறைவாக 12 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தை மதிப்பில் 30 ஆயிரம் வரை உள்ளது. வாடகை நிர்ணயிப்பதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டினர்.

இதற்கு பதில் அளித்த மேயர் கவிதா கணேசன் புதிய பேருந்து நிலைய கடைகளுக்கு சந்தை மதிப்பு மற்றும் பொதுப் பணித் துறை வழிகாட்டி அடிப்படையிலேயே வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் எந்தவித முறைகேடும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தண்டபாணி பேசுகையில் கரூர் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த தினசரி ஊதியமான 791 ரூபாய்க்கு பதிலாக ஒப்பந்ததாரரால் 400 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. துப்புரவு பணியாளர்கள் காலை 6 மணி முதல் வேலை செய்து வருகின்றனர் மிகவும் சிரமப்படுகின்றனர் எனவே அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும்,

எனவே, அரசு நிர்ணயித்த 791 ரூபாயை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்துவிட்டு பின்னர் கூட்டம் நிறைவு பெற்றது என மேயர் கவிதா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

error: Content is protected !!