கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகரிகள் இன்று மேலும் பலரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில்
நேற்று சிபிஐ அலுவலகத்தில் காயமடைந்த நபர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அரசு மருத்துவர்கள் என சுமார் 9 நபர்களிடம் விசாரணைக்கு ஆஜராகினர்.
இன்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக கூட்ட நெரிசலில் காயம் அடைந்த நான்கு பேர் மற்றும் உடல் கூறு ஆய்வு செய்த அரசு மருத்துவர் ஒருவர் என மொத்தம் 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பான சிபிஐ அதிகாரிகள் உயிரிழந்த நபர்களின் வீடு மற்றும் காயமடைந்த நபர்கள் என பலரின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

